வேலணையில் மாணவர்களுக்கு கல்விசார் உபகரணம் வழங்கும் நிகழ்வு!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

சமூகப் பொருளாதார சிக்கல் காரணமாக பாதிக்கப்பட்ட பாடசாலைமாணவர்களுக்கு கல்விசார்  உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சித் திட்டம்வேலணை  பிரதேச செயலாளர் ‘கே. சிவகரன் அவர்களின் தலைமையில்நேற்றுமுன்தினம் (ஜூன் 22) ) வேலணைப் பிரதேச செயலக மாநாட்டுமண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில்  யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்கள்பிரதம விருந்தினராக  கலந்து கொண்டு  மாணவர்களுக்கான பாடசாலைஉபகரணங்களை வழங்கி வைத்தார்.

இதேவேளை ஊர்காவற்றுறை , காரைநகர், மருதங்கேணி மற்றும் நெடுந்தீவுஆகிய பிரதேச செயலகங்களிலிருந்தும் தெரிவு செய்யப்பட்ட 20 மாணவர்களுக்கு இவ் உபகரணங்கள்  வழங்கி வைக்கப்பட்டவுள்ளன.

சமூக நலன்விரும்பி  நடராஜா ஜெயவர்த்தனா அவர்களால் சமூக பொருளாதாரசிக்கல் காரணமாக பாதிக்கப்பட்ட  மாணவர்களுக்கு ரூபா ஐந்து  இலட்சம்பெறுமதியான  பாடசாலை உபகரணங்கள்  வழங்கி வைக்கப்பட்டமைகுறிப்பிடத்தக்கது.

இந் நிகழ்வில் சமூக நலன்விரும்பி  திரு. நடராஜா ஜெயவர்த்தனா,  மாவட்டசிறுவர் பாதுகாப்பு இணைப்பாளர் இ.செந்தூரன், மாவட்ட உளவள சமூகஉத்தியோகத்தர், மாவட்ட முன்பள்ளி  அபிவிருத்தி உத்தியோகத்தர், பிரதேச  செயலக சிறுவர் பெண்கள் அபிவிருத்தி  உத்தியோத்தர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் ஆகியோா் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Share this Article