வேலணையில் நிலத்திற்குக் கீழ் பதுக்கி வைக்கப்பட்ட 40 கிலோ கஞ்சா மீட்பு – மூவர் கைது

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

வேலணையில் நிலத்திற்குக் கீழ் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 40 கிலோகிராம் கஞ்சா போதைப்பொருள் மீட்பு

வேலணை கடற்கரைப் பகுதியில், நிலத்தில் ஆழமான குழி வெட்டி அதனுள் பெருமளவான கஞ்சா போதைப்பொருள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது. மன்னார் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், மன்னாரில் இருந்து வருகை தந்த சிறப்பு பொலிஸ் குழுவினர் சம்பவ இடத்துக்குச் சென்று, புதைக்கப்பட்டிருந்த கஞ்சாவை மீட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாகவேலணையைச் சேர்ந்த மூன்று சந்தேக நபர்கள் ஊர்காவற்றுறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த கஞ்சா போதைப்பொருள் இந்தியாவில் இருந்து படகு மூலம் கடத்தி வரப்பட்டு, கடற்கரையை ஒட்டிய பகுதிகளில் நிலத்திற்குள் பதுக்கப்பட்டிருக்கலாம் என ஆரம்பக் கட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த போதைப்பொருள் வலைப்பின்னலுடன் தொடர்புடைய மற்ற நபர்கள் தொடர்பாகவும் மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

Share this Article