வேலணை பிரதேசத்திற்கான பிறப்பு, இறப்பு மற்றும் தீவுப் பகுதி விவாகப் பதிவாளராக நியமிப்பு!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

வேலணை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வேலணை பிரதேசத்திற்கான பிறப்பு, இறப்பு பதிவாளராகவும், தீவுப் பகுதிக்கான விவாகப் பதிவாளராகவும் திரு. குணசிங்கம் துசாந்தன் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.

பதிவாளர் நாயகம் வழங்கிய நியமனக் கடிதம், நேற்று முன்தினம் (பெப் 24) யாழ்ப்பாணம் மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களால் அவருக்குப் பதிவுசெய்து வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் பிரதிப் பதிவாளர் நாயகம், உதவிப் பதிவாளர் நாயகம் மற்றும் காணி மாவட்ட பதிவாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Share this Article