வேலணை பிரதேச சபைத் தவிசாளராக சிவலிங்கம் அசோக்குமார் தெரிவு!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

வேலணை பிரதேச சபையின் புதிய தவிசாளராக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் சிவலிங்கம் அசோக்குமார் இன்று (ஜூன் 20) தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இன்றைய தினம் முற்பகல் 11.30 மணிக்கு வேலணை பிரதேச சபைச் சபா மண்டபத்தில் நடைபெற்ற விசேட கூட்டத்தின் போது, வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் தேவநந்தினி பாபு தலைமையில் தவிசாளரும் உப தவிசாளரும் தெரிவு செய்யப்பட்டனர்.

நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி தேர்தலில், 20 ஆசனங்களைக் கொண்ட வேலணை பிரதேச சபைக்கு, விஷேட ஆசன விநியோகத்தின் அடிப்படையில் மேலும் 2 ஆசனங்கள் இணைக்கப்பட்டு, மொத்தமாக 22 உறுப்பினர்கள் உள்ளனர்.

பகிர்வு விவரங்கள்:

  • இலங்கை தமிழ் அரசுக் கட்சி – 8 ஆசனங்கள்

  • ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி – 3 ஆசனங்கள்

  • அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் – 2 ஆசனங்கள்

  • தேசிய மக்கள் சக்தி – 4 ஆசனங்கள்

  • தமிழ் மக்கள் கூட்டணி, ஐக்கிய தேசியக் கட்சி, மற்றும் 3 சுயேட்சைக் குழுக்கள் தலா 1 ஆசனம்செய்தன.

இந்நிலையில், தமிழரசுக் கட்சி சார்பில் சிவலிங்கம் அசோக்குமார் ஏகமனதாக முன்மொழியப்பட்டு தவிசாளராக தெரிவு செய்யப்பட்டார். வாக்களிப்பு வேளையில் சுயேட்சைக் குழுவின் உறுப்பினர் சுவாமிநாதன் பிரகலாதன் வெளிநடப்பு செய்தார்.

இதேவேளை, உப தவிசாளராக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கணபதிப்பிள்ளை வசந்தகுமாரன் யாரும் எதிர்க்காமல் தெரிவு செய்யப்பட்டார்.

Share this Article