வெளிவிவகார அமைச்சின் கொன்சியூலர் பிரிவு இடமாற்றம்!!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

வெளிவிவகார அமைச்சின் கொன்சியுலர் அலுவல்கள் பிரிவு எதிர்வரும் மே மாதம்2 ஆம் திகதி முதல் பத்தரமுல்லை – சுஹுருபாய நிர்வாக கட்டிடத்துக்குமாற்றப்படவுள்ளது.

குறித்த தினத்திலிருந்து, புதிய அலுவலகத்தில் வழமையான அலுவலகநேரங்களில் சகல கொன்சியுலர் சேவைகளும் பொதுமக்களுக்கு வழங்கப்படும்என வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

அதேநேரம், கொழும்பிலுள்ள கொன்சியுலர் அலுவல்கள் பிரிவினால்பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுவரும் ஆவண அத்தாட்சிப்படுத்தல் சேவைகள், எதிர்வரும் 29 மற்றும் 30 ஆம் திகதிகளில் தற்காலிகமாக இடைநிறுத்தப்படும்எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், குறித்த காலப்பகுதியினுள் பிராந்திய அலுவலகங்களில் சேவைகளைபெறமுடியுமென வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

Share this Article