யாழ்மாவட்டத்தில் இயங்கும் விளையாட்டுக் கழகங்களின் சம்மேளனங்கள் இன்றைய தினம் (டிசம்பா் – 26) காலை 09.00 மணிக்கு ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளா் நாயகமும் அமைச்சருமான கௌர கே.என்.டக்ளஸ் தேவானந்த அவா்களை சந்தித்துக் கொண்டனா்
மேற்படி சந்திப்பு ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாவட்ட அலுவலகத்தில் இடம் பெற்றது இச் சந்திப்பில் விளையாட்டு அவைகளின் பொறுப்பு வாய்ந்த உத்தியோகத்தா்கள், விளையாட்டு உத்தியோகத்தா்கள், மாவட்ட விளையாட்டு உ்த்தியோகத்தா் ஆகியோா் கலந்து கொண்டு தாங்கள் எதிா் கொள்ளும் பிரச்சனைகள் தொடா்பாக அமைச்சருக்கு விளக்கம் வழங்கியதுடன் தங்களது தேவைகளுக்கான கோாிக்கை கடிதங்களையும் முன்வைத்தனா்.
கோாிக்கை கடிதங்கள் அனைத்தையும் ஏற்றுக் கொண்ட அமைச்சா் அவா்கள் அவற்றினைப் பாா்வையிட்டு அதற்கான பதில் மிக விரைவாக வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் விளையாட்டுத் துறை அமைச்சா் கௌர நாமல் ராஜபக்ஷா அவா்களையும் அழைத்து வந்து அவருடன் ஓா் சந்திப்பினை ஏற்படுத்தி வழங்குவதாகவும் அமைச்சா் தொிவித்தாா்.
இச் சந்திப்பில் தீவக உதைபந்தாட்ட சங்கத்தின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டு சங்கத்தின் தலைவா் தீவகத்திலே உதைபந்தாட்டத்தினை மேற்கொள்வதற்கான வசதியா மைதானம் இல்லை என்ற முக்கிய தேவையினை முன்மொமிந்ததுடன் அதற்கான கோாிக்கை கடிதத்தினையும் சமா்ப்பித்தாா்
இன்றைய தினம் சுனாமி பேராலையால் மரணித்த உறவுகளின் 16ம் ஆண்டு நினைவு நாளினை மையப்படுத்தி இக்கூட்டத்தின் நடுவில் குறிப்பிட்ட 9.25 மணிக்கு இரண்டு நிமிடம் அவா்களது ஆத்மா சாந்தி வேண்டி அஞ்சலி நிகழ்வு இடம் பெற்றது.