வாக்காளர் அட்டைகள் கடைகளில் மீட்பு – தபால் ஊழியர் உட்பட இருவர் கைது!!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

வவுனியா பூந்தோட்டம் பகுதியில் உள்ள வியாபார நிலையம் ஒன்றில் ஒருதொகைவாக்காளர் அட்டைகள் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் ஆளும்கட்சி வேட்பாளர்ஒருவரின் சகோதரனும், தபால் ஊழியர் ஒருவரும் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் திங்கட்கிழமை (ஏப்ரல்28) இடம்பெற்றுள்ளது. சம்பவம்தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

பூந்தோட்டம் பகுதியில் உள்ள பலசரக்கு வியாபார நிலையம் ஒன்றில்ஒருதொகை உள்ளூராட்சி மன்றத்தேர்தலுக்குரிய வாக்காளர் அட்டைகள்இருப்பதாக தேர்தல் திணைக்களத்திற்கு முறைப்பாடு வழங்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்கு சென்ற அதிகாரிகள் மற்றும் பொலிஸார் விசாரணைகளைமுன்னெடுத்ததுடன் அங்கிருந்து ஒருதொகை வாக்காளர் அட்டையினைமீட்டுள்ளனர்.

இதேவேளை, அதனை உடமையில் வைத்திருந்த குற்றத்திற்காகவியாபாரநிலையத்தின் உரிமையாளர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், அந்தப்பகுதிக்குரிய தபால் ஊழியரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட வியாபார நிலைய உரிமையாளரின் சகோதரன் தேசியமக்கள்சக்தியின் வவுனியா மாநகரசபைக்காக போட்டியிடும் வேட்பாளர் என்பதுகுறிப்பிடத்தக்கது.

சந்தேகநபர்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு விளக்கமறியலில்வைக்கப்பட்டுள்ளனர்.

Share this Article