வவுனியாவில் நிலநடுக்கம் பதிவு!

SUB EDITOR
SUB EDITOR
2 Min Read

இலங்கையில் வவுனியாவை அண்மித்த பகுதியில் நிலநடுக்கம்உணரப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நேற்றிரவு 2.3 மெக்னிடியூட் அளவிலான நில அதிர்வு பதிவாகி உள்ளதாகபுவிசரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.

மஹகனந்தராவ, ஹக்மன மற்றும் பல்லேகலை நில அதிர்வு நிலையங்களில் இந்தநிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம்தெரிவித்துள்ளது.

இதேவேளை யாழ் பல்கலைக்கழக முதுநிலை விரிவுரையாளர்  நாகமுத்துபிரதீபராஜா அவர்களது

இன்று(ஜூன்19) காலை 6.00 அறிக்கையில்

“நேற்று இரவு ( 18.06.2024) 11.02 மணியளவில் சிறிய அளவிலான நிலஅதிர்வுகள் உணரப்பட்டுள்ளதாக பல செய்தி தளங்களில் சமூக வலைத்தளங்களிலும் செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன. இன்னும் அதிகாரபூர்வமானஅறிவித்தலை இலங்கை அரசாங்கம் வெளியிடவில்லை.

இலங்கையின் நிலப்பகுதிகளிலும், இலங்கையை அண்மித்த கடல் பகுதிகளிலும்கடந்த 05 ஆண்டுகளில் 29 நில அதிர்வுகள் அதிகாரபூர்வமாக பதிவுசெய்யப்பட்டுள்ளன. இவை புவி நடுக்க பதிவு கருவியில் (Seismograph) குறைந்த அளவுத் திட்டத்தில் ( ரிக்டர்) இருந்தாலும் கூட , இவை நாம் ஒருமிகப்பெரிய புவி நடுக்க வாய்ப்பைக் கொண்டிருக்கின்றோம் என்பதனைவெளிப்படுத்துகின்றன.

பூமி பெரியதும் சிறியதுமான பல கவசத்தகடுகளால் உருவாக்கப்பட்டுள்ளது. இலங்கை இந்தோ– அவுஸ்திரேலியா கவசத்தகட்டின் வட மேற்கு பிராந்தியத்தில்அமைந்துள்ளது.  இலங்கையில் அண்மையில் அதிகமாக நிகழும் புவி நடுக்கஅதிர்வுகள் இலங்கையின் கீழான  கவசத்தகடுகளில்( சிறிய தகடுகள் நிறையஉண்டு) சிறிய அளவிலான மாற்றங்கள்( விலகல், ஒருங்கல் , அமிழ்தல்) ஏற்படுவதை வெளிப்படுத்தியுள்ளன.   இந்த மாற்றங்கள் பெரிதாக அமையும்சந்தர்ப்பத்தில் மிகப்பெரும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய புவிநடுக்கங்கள்இலங்கையில் தோன்றலாம்.

உலகில் முன்னெதிர்வு கூற முடியாத மிகப்பெரும் உயிரழிவுகளைஏற்படுத்தக்கூடிய இயற்கை அனர்த்தங்களில் புவி நடுக்கம் முதன்மையானது. ஆனால் சிறப்பான விழிப்புணர்வுடன் இருந்தால் ஓரளவு பாதிப்புக்களைகுறைக்கலாம்.

இலங்கையில் புவிநடுக்கத்தினை பதிவு செய்யும் புவி நடுக்க பதிவு கருவிகள்கண்டி–பள்ளேகலவிலும், அனுராதபுரம்– மிகிந்தலையிலும், மட்டக்களப்பிலும்மாத்தறையிலும் உள்ளன. வவுனியாவில் ஏற்பட்ட நில அதிர்வு மிகிந்தலையில்உள்ள புவி நடுக்க பதிவு கருவியில் பதிவாகியிருக்கும்.

எனினும் உத்தியோகபூர்வ அறிவித்தல் இதுவரை வெளியாகவில்லை  

எவ்வாறாயினும் இலங்கையின் அனைத்துப் பகுதிகளும் மிகப் பெரியபுவிநடுக்கத்திற்கான வாய்ப்பைக் கொண்டுள்ளன என்பது நிஜம்” என குறிப்பிட்டுள்ளார்.

Share this Article