வவுனியாவில் இளைஞா் குழு அட்டகாசம்

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

வவுனியா, வைரவபுளியங்குளம் பகுதியில் இளைஞர் குழு ஒன்று வர்த்தக நிலையத்திற்குள் புகுந்து கைகலப்பில் ஈடுபட்டதில் இருவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

நேற்று இரவு வவுனியா, வைரவபுளியங்குளம் பகுதியில் உள்ள மதுபானசாலையில் மது அருந்தி விட்டு வந்த இளைஞர் குழு ஒன்று மதுபானசாலைக்கு முன்பாக இருந்த வர்த்தக நிலையத்திற்குள் புகுந்துள்ளனர்

இதன்போது அதன் உரிமையாளர் மீது தாக்குதல் நடத்தியதுடன், அருகில் இருந்த வர்த்தக நிலையங்களில் நின்றோர் மற்றும் வீதியில் நின்றோரையும் அச்சுறுதியுள்ளனர்

இதன்போது ஏற்பட்ட அடிதடி மற்றும் கைகலப்பில் இருவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
மேலும் சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Share this Article