வற்றாப்பளை ஆலய உற்சவத்தில் உணவு கையாளும் வியாபார நிலையங்கள் அனுமதி அவசியம் !!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவம்எதிர்வரும் மே09 இல் நடைபெறவுள்ளது.

இந்நிலையில் அதற்கான முன் ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றது. இந்நிலையில் ஆலய வளாகத்திலுள்ள உணவு கையாளும் வியாபாரநிலையங்களுக்கான அறிவுறுத்தல் ஒன்றினை வற்றாப்பளை பொது சுகாதாரபரிசோதகர்கள் இன்றையதினம் (மே31) அறிவிப்பினை விடுத்துள்ளனர்.

உணவகம் (ஹோட்டல்) சர்பத் கடை தவிர்ந்த ஏனைய உணவு கையாளும்நிலையங்களான ஜஸ்கிறீம் கடை, ஜஸ்கிறீம் வாகனம், பூந்தி இனிப்பு வகைகள்மற்றும் மிக்சர் கடைகள் அனைத்தும் தத்தமது பிரதேச உள்ளூராட்சி சபைகளின்அனுமதியினை பெற்றிருத்தல் வேண்டும் என்பதுடன் ஜஸ்கிறீம், உணவகங்கள், தேநீர், பூந்தி இனிப்பு, மிக்சர் சர்பத் வியாபாரம் செய்பவர்கள் அனைவரும்மருத்துவச் சான்றிதழ் பெற்றிருத்தல் வேண்டும் எனவும்

சர்பத் வியாபாரம் செய்பவர்கள் அனுமதி பெற்ற ஐஸ்கிறீம் கடைகளில் மாத்திரமேஐஸ்கட்டிகளை கொள்வனவு செய்தல் வேண்டும் என்பதுடன் அதற்கான பற்றுச்சீட்டினை தம்வசம் வைத்திருத்தல் வேண்டும்.

உணவகத்திற்கும், சர்பத் கடைகளுக்குமான உரிமையாளர்கள் எதிர்வரும்  சனிக்கிழமை (மே07) மாலை 4.00 மணிக்கு வற்றாப்பளை பொது சுகாதாரபரிசோதகரின் உற்சவகால அலுவலகத்தில் இடம்பெறும் கலந்துரையாடலில்கட்டாயம் பங்குபற்றுதல் வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் காவடி உரிமையாளர்கள் மே 08 க்கு முன்னர் பொது சுகாதாரபரிசோதகருக்கு அறிவித்து அவரின் அனுமதியினை பெற்று கொள்ளவேண்டியதுடன் உணவு கையாளும் நிலையங்கள் அனைத்தும் பொது சுகாதாரபரிசோதகரின் அனுமதியினை பெற்றுக்கொள்ள வேண்டும்.

சிகரெட், புகையிலை, மதுசாரம் ஆலய வளாகத்தினுள்ளே வியாபாரம் செய்வதுதடை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share this Article