வட கடலில் 15 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா சிக்கியது!!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

எழுவைதீவுக்கு அப்பால் உள்ள கடற் பகுதியில் இலங்கை கடற்படை நேற்று(ஜூலை12) நடத்திய விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, 15 மில்லியன்ரூபாய்க்கும் அதிகளவு பெறுமதிக் கொண்ட சுமார் 38 கிலோ 700 கிராம் கேரளகஞ்சா கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.

 எழுவைதீவுக்கு அப்பால் உள்ள கடல் பகுதியில், வடக்கு கடற்படை கட்டளைக்குசொந்தமான இலங்கை கடற்படை கப்பல் எலார நிறுவனத்தின் கடற்படையினர்நடத்திய இந்த விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, அந்த கடல் பகுதியில்மிதக்கும் சந்தேகத்திற்கிடமான பையொன்று கண்காணிக்கப்பட்டு ஆய்வுசெய்யப்பட்டது.

அந்தப் பையில் அடைக்கப்பட்டிருந்த சுமார் 38 கிலோ 700 கிராம் கேரள கஞ்சாகடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.

கடற்படையின் நடவடிக்கைகளின் மூலம் கரைக்கு கொண்டு வர முடியாததால், கடத்தல்காரர்கள் கேரள கஞ்சா கையிருப்பை எலுவை கடலில்கைவிட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதுடன், பறிமுதல் செய்யப்பட்ட கேரளகஞ்சா கையிருப்பின் பெறுமதி 15 மில்லியன் ரூபாய்க்கும் அதிகம் எனநம்பப்படுகிறது.

கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சா தொகையானது, மேலதிக சட்டநடவடிக்கைகளுக்காக ஊர்காவல்துறை பொலிஸ் நிலையத்தில்ஒப்படைக்கப்படவுள்ளது.

Share this Article