யாழில் புத்தாண்டு தினத்தில் சிறுமி பரிதாபமாக மரணம்
தென்மராட்சி மட்டுவில் பகுதியில் ஒன்றரை வயது சிறுமி பரிதபகரமான இன்றை புதுவருட தினத்தன்று மரணமடைந்துள்ளார்.
மட்டுவில் துர்க்கை அம்மன் ஆலயத்திற்கு அண்மையில் இச் சம்பவம் இடம் பெற்றுள்ளது. இச் சம்பவத்தில் கஜேந்திரன் சுவேசனா எனும் ஒன்றரை வயது சிறுமி பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த தாயாரின் ஸ்கூட்டி ரக மோட்டார் சைக்கிளை 08வயது சிறுவன் இயக்கிய வேளையில் வீட்டு முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்த மேற்படி சிறுமியின் வயிற்றுக்கு மேலாக பாய்துள்ளமையால் சிறுமி சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளார்.
சாவகச்சேரி மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்ட சிறுமியின் உடல் மேலதிக சிகிச்சைக்காக யாழ் மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.