மோட்டார் சைக்கிளில் கசிப்பு விற்பனை – இருவர் கைது !

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் மோட்டார் சைக்கிளில் கசிப்பு விற்பனை செய்தஇரண்டு இளைஞர்கள் புதுக்குடியிருப்பு பொலிஸாரால் நேற்று வெள்ளிக்கிழமை(பெப். 28) கைது செய்யப்பட்டுள்ளனர்.

முல்லைத்தீவு விசுவமடு பகுதியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி செய்யப்பட்டுபுதுக்குடியிருப்பு நகர் பகுதியில் விற்பனை செய்யப்படுவதாக புதுக்குடியிருப்புபொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து, புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக மோட்டார் சைக்கிளைமறித்து சோதனை செய்த போது இளைஞர்கள் இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

விசுவமடு பகுதியை சேர்ந்த 21, 26 வயதுடைய இரு இளைஞர்களே கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 55 லீற்றர் கசிப்புபொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

சந்தேக நபர்கள் இருவரும் மேலதிக விசாரணையின் பின்னர் இன்று சனிக்கிழமை (மார்ச் 01) முல்லைத்தீவு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

Share this Article