மே தினக் கூட்டத்துக்கு அரசியல் கட்சிக்களுக்கு கட்டணம் செலுத்தாமல்பேருந்துகள் விடுவிக்கப்படாது!!!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

மே தினக் கூட்டத்துக்கு எந்தவொரு அரசியல் கட்சிக்கும் பணம் செலுத்தாமல்பேருந்துகளை வழங்க வேண்டாம் என்று இலங்கை போக்குவரத்து சபையின்தலைவருக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் பந்துலகுணவர்தன தெரிவித்தார்.

வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடுசெவ்வாய்க்கிழமை (30) இடம்பெற்ற போது இதனைத் தெரிவித்த அவர் மேலும்குறிப்பிடுகையில்,

பணம் செலுத்தாமல் எந்தவொரு கட்சிக்கும் இலங்கை போக்குவரத்து சபையின்பேருந்துகள் மே தினக் கூட்டத்துக்காக வழங்கப்பட மாட்டாது. இது தொடர்பில்இலங்கை போக்குவரத்து சபையின் தலைவருக்கு ஆலோசனைவழங்கப்பட்டுள்ளது.

பொது போக்குவரத்துக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில், எந்தவொருஅரசியல் கட்சிக்கும் அல்லது தொழிற்சங்கத்துக்கும் பணத்தைச் செலுத்தியபின்னர் பேருந்தினை வழங்குமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது என்றார்.

Share this Article