முல்லைத்தீவு மாவட்ட செயலகத்துக்கு விஜயம் – கனடா உயர்ஸ்தானிகர்

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

இலங்கை மற்றும் மாலைதீவுக்கான கனடா உயர்ஸ்தானிகர் எரிக் வோல்ஸ்  அவர்கள் நேற்றையதினம் (ஒக். 15)  முல்லைத்தீவு  மாவட்ட  செயலகத்துக்குவிஜயம் செய்தார்.

இதன் போது அரசாங்க அதிபர்  அ.உமாமகேஸ்வரன்  அவர்களை  சந்தித்துமாவட்ட வளர்ச்சித் திட்டங்கள்  தொடர்பாக கலந்துரையாடியுள்ளார்.

இக்கலந்துரையாடலின்போது   அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும்திட்டங்கள் தொடர்பிலும் முல்லைத்தீவு மாவட்டத்தில் மக்கள் எதிர்நோக்கும்பல்வேறு சவால்கள் பிரச்சினைகள் தொடர்பிலும் முல்லைத்தீவு மாவட்டத்தில்காணப்படும் பல்வேறு அபிவிருத்தித் தேவைகள் தொடர்பிலும் முல்லைத்தீவு  மாவட்ட அரசாங்க அதிபரினால் கனடா உயர்ஸ்தானிகருக்கு விபரிக்கப்பட்டது.

இந்த சந்திப்பின் போது முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்திரு.எஸ்.குணபாலன் அவர்களும் மாவட்ட தொழித்துறை அமைப்புப்பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.

Share this Article