முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் களப்பு கடலிற்கு தொழிலுக்கு சென்றஜெயராஜ் சுபராஜ் (வயது21) என்ற இளைஞன் இனந்தெரியாதோரால் கொலைசெய்யப்பட்டு சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் ஒன்று இன்று (ஓகஸ்ட்08) இடம்பெற்றுள்ளது.
கொக்குத்தொடுவாய் கோட்டைக்கேணி பிள்ளையார் ஆலயத்திற்கு முன்பாககொக்குத்தொடுவாய் களப்பு கடலில் நேற்று (ஓகஸ்ட் 07) இரவு தொழிலுக்குசென்ற இளைஞன், இன்று அதிகாலை தொழில் முடித்து மோட்டார் சைக்கிளில்திரும்பிய போது கூரிய ஆயுதத்தால் வெட்டிக்கொலை செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்று அதிகாலை 2.30 மணியளவில் வேறு நபர் ஒருவர் தொழிலுக்குசெல்லும்போது குறித்த இளைஞன் வீதியில் வீழ்ந்து கிடப்பதை அவதானித்து அப்பகுதியில் யானை நடமாட்டம் அதிகமாகையால் யானை தாக்கிவிட்டதெனக் கூறி குறித்த இளைஞனின் தந்தையையும், கிராம அபிவிருத்தி சங்கதலைவரையும் விரைந்து அவ்விடத்திற்கு கூட்டிச் சென்று பார்த்த போதேஇளைஞனின் உடலில் வெட்டுக் காயங்கள் இருந்தமை தெரியவந்ததுள்ளது.
பின்னர் கொக்குளாய் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதை தொடர்ந்து தீவிரவிசாரணையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர். அத்தோடு சம்பவ இடத்திற்குவருகைதந்த முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் சடலத்தைபார்வையிட்டு மோப்பநாய் சகிதம் சோதனையை மேற்கொள்ளுமாறும், கைவிரல்அடையாளத்தை பரிசோதனை மேற்கொள்ளுமாறும் , உடலத்தை உடற்கூற்றுபரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கவும் பொலிஸாருக்குஉத்தரவிட்டுள்ளதுடன் இதுதொடர்பில் மேலதிக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரியவருகின்றது.