முறிகண்டிப் பகுதியில் விபத்து! இராணுவச் சிப்பாய் பலி! இராணுவத்தினர் நால்வர் படுகாயம்!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

முல்லைத்தீவு மாவட்டம் முறிகண்டி ஏ – 9 வீதியில் இடம் பெற்ற வாகன விபத்தில்இராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன்   மேலும் நான்கு  பேர் படுகாயம்அடைந்துள்ளனர்.

 ஏ9 வீதியின் யாழ்ப்பாணம் நோக்கி  பயணித்த பாரஊர்தி  ஒன்றும் திருமுருகண்டிபகுதியில் உள்ள இராணுவ   முகாமுக்கு திரும்ப முற்பட்ட கப்ரக  வாகனமும்  இன்று வெள்ளிக்கிழமை (26) காலை மோதி  இந்த  விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த இரு வாகனங்களும் மோதி விபத்துக்குள்ளானதில் கெப்ரக வாகனத்தில்பயணித்த இராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன்,  நான்கு பேர் படுகாயம்அடைந்துள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்த இராணுவ வீரரின் சடலம் கிளிநொச்சி மாவட்ட பொதுவைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளைமாங்குளம் போலீசார் முன்னெடுத்து வருகின்றனர்.

Share this Article