முதலீட்டாளர்கள் வரும்போதும் எமது திணைக்களங்களால் முழுமையாக ஒத்துழைப்பதில்லை – ஆளுநர் கவலை!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

பல முதலீட்டாளர்கள் முதலிடுவதற்காக வருகின்றபோதும் எமதுதிணைக்களங்களால் அவர்களுக்கு முழுமையான ஒத்துழைப்புகிடைக்கப்பெறவில்லை என மண்டைதீவில் அமைக்கப்பட்டுள்ள ‘நெய்தல்சூழல்நேய பூங்கா‘ கடந்த வெள்ளிக்கிழமை (மே09) வடக்கு மாகாண ஆளுநர்நா.வேதநாயகன் அவர்களால் திறந்து வைக்கப்பட்டு நிகழ்வில் உரையாற்றியஆளுநர் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் …

யாழ். மாவட்டச் செயலராக நான் பணியாற்றிய காலத்தில் இந்தப் பகுதியில்சுற்றுலாத்துறைக்கான அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. துரதிஷடவசமாக அப்போதிருந்த பிரதேச சபை நிர்வாகம் எமக்கு முழுமையானஒத்துழைப்பை வழங்கவில்லை.

பல முதலீட்டாளர்கள் முதலிடுவதற்காக வருகின்றபோதும் எமதுதிணைக்களங்களால் அவர்களுக்கு முழுமையான ஒத்துழைப்புகிடைக்கப்பெறவில்லை. தமது சபைகளுக்கு வருமானத்தை ஈட்டித் தரக் கூடியமுதலீட்டாளர்களின் தேவைகளை நிறைவேற்றிக் கொடுப்பதற்கு தயக்கம்காண்பிக்கின்றனர். இழுத்தடிப்புச் செய்கின்றனர். ஏற்கனவே இங்குமுதலீடுகளைச் செய்த பலரும், எமது நிர்வாகங்களின் அசமந்தமான செயற்பாடுகாரணமாக கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இந்த நிலைமைதொடருமானால் இங்கு முதலீட்டாளர்கள் வருவதற்கு தயக்கமான நிலைமையேஏற்படும். அது எமது மாகாணத்தை பல வகையிலும் பாதிக்கும். இளையோருக்குவேலை வாய்ப்பு தேவை என்று நாம் கோரும் அதேவேளை அதற்கு முதலீடுதான்வழியாக இருக்கும் நிலையில் அதனையும் இழப்பது பெரும் பாதிப்பைஏற்படுத்தும்.

இங்கு அமைக்கப்பட்டுள்ள பூங்கா போன்று பல வேலைத் திட்டங்கள்எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படும் என நம்புகின்றேன். அத்துடன் இந்தப்பிரதேசத்தில் இவ்வாறான முயற்சியை மேற்கொண்டுள்ள நெய்தல் சூழல் நேயப்பூங்காவின் நிறுவுனருக்கு பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும்தெரிவித்தார்  

இதேவேளை இந்தப் பூங்கா 2 ஆண்டுகளில் 7 கட்டங்களாக அபிவிருத்திசெய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

Share this Article