முசலி பிரதேச செயலாளர் பிரிவு எஸ்.பி பொற்கேணியில் குளாய்க் கிணறுகள் கையளிப்பு!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

லைக்கா ஞானம் அறக்கட்டளையின் நிதி உதவியுடன் மன்னார் மாவட்டம் முசலிபிரதேச செயலாளர் பிரிவில் உள்ள எஸ்.பி பொற்கேணி கிராமத்தில் மக்களின்குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு அமைக்கப்பட்ட மூன்று குழாய் நீர்கிணறுகள் இன்றைய தினம் புதன்கிழமை (ஏப்ரல்17) காலை வைபவ ரீதியாகதிறந்து வைக்கப்பட்டு மக்களின் பாவனைக்கு கையளிக்கப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன், மத தலைவர்கள்,பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் லைக்கா ஞானம்அறக்கட்டளை பணியாளர்கள் இணைந்து வைபவ ரீதியாக திறந்து வைத்தனர்

தமது கிராமத்தில் குடிநீர் வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்பட வில்லை எனவும்இதனால் தாம் பல வருடங்களாக பல்வேறு துயரங்களுக்கு முகம் கொடுத்துவந்ததாகவும் தற்போது அறக்கட்டளையினரின் உதவியுடன்முன்னெடுக்கப்பட்டுள்ள இவ் உதவி தமக்கு பாரிய பேருதவியாகஅமைந்துள்ளதாக அக்கிராம மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share this Article