நான்கு ஆண்டுகளுக்கு முன்பு சீனாவில் உருவான கொரோனா வைரஸ் தொற்று உலக நாடுகளில் உள்ள பல இலட்சக்கணக்கான மக்களின் உயிரை பறித்தது.
அதனை தொடர்ந்து கொரோனாவின் உருமாற்றங்கள் காரணமாக மேலும் பலர் உயிரிழந்தனர்.
இந்த தொற்றில் இருந்து உலக நாடுகள் தற்போது மீண்டு வந்துகொண்டு இருக்கும் நிலையில் தற்போது புதிய வைரஸ் ஒன்று உருவெடுக்கவுள்ளது என்று நிபுணர்கள கூறுகின்றனர்.
சீனாவில் உருவாகிய கொரோனா வைரஸை போன்ற ஒரு வைரஸ் மீண்டும் பரவ வாய்ப்பு இருப்பதாக சீனாவின் தொற்று நோய் நிபுணர் ஹி சென்க்ஸ் தெரிவித்துள்ளார். இந்த தொற்றானது வௌவால்கள் மூலம் பரவும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.