வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் அலகின் நிதி அனுசரணையுடன், மாந்தை கிழக்கு பிரதேச செயலகமும் கலாசாரப் பேரவையும் இணைந்து நடத்திய “பிரதேச பண்பாட்டுப் பெருவிழா – 2026” நேற்று (18.09) மாந்தை கிழக்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வு பிரதேச செயலாளரும் கலாசாரப் பேரவைத் தலைவருமான செல்வி. மரியாம்பிள்ளை சர்மிளி அவர்களின் தலைமையில் நடைபெற்றதுடன் பிரதம விருந்தினராக
மஞ்சுளாதேவி சதீஷன்
மேலதிக மாவட்டச் செயலாளர் (நிர்வாகம்),மாவட்டச் செயலகம், முல்லைத்தீவுஅவர்கள் கலந்து சிறப்பித்தார். சிறப்பு விருந்தினர்களாக தவிசாளர் இராசையா நளினி, பிரதேச சபை, மாந்தை கிழக்கு மற்றும்
திரு. துரைசிங்கம் ஜெயதேவன், பிரதிக் கல்விப் பணிப்பாளர் , மூத்த கலைஞர் திரு. இரத்தினம் ஜெயசீலன், திரைப்பட இயக்குநர் திரு. நடராசா பிரகாஷ்ய ஆகியோர் பங்கேற்றனர்.
நிகழ்வில் வரவேற்பு நடனம், உடுக்கை நடனம், கிராமிய நடனம், குறத்தி நடனம், குழு இசை, நாடகம், உழவர் நடனம் உள்ளிட்ட பல்வேறு கலைநிகழ்ச்சிகள் இடம்பெற்றதுடன், “வில்லுப்பாட்டு – மீள விழித்திடு (கலையருவி கலாமன்றம்)” சிறப்பு நிகழ்வாக நடைபெற்றது.
கலைஞர் கௌரவிப்பு மற்றும் சான்றிதழ் வழங்கலும் நிகழ்வின் சிறப்பம்சமாக அமைந்தது.