வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் தரம் 9 இல் கல்வி பயிலும் திருச்செல்வம் ஷெர்வின் என்ற மாணவன், பாதுகாப்பற்ற புகையிரதக் கடவைகளில் இடம்பெறும் விபத்துகளைத் தடுப்பதற்காக தானியங்கி பாதுகாப்புப் பொறிமுறை ஒன்றை உருவாக்கி அசத்தியுள்ளார்.

இக்கண்டுபிடிப்பிற்கான செயல்முறை விளக்கம், கூட்டுறவு அபிவிருத்தி பிரதியமைச்சரும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான உபாலி சமரசிங்க மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஜெகதீஸ்வரன் ஆகியோருக்குக் காண்பிக்கப்பட்டது.
மாணவனின் இந்தச் சிறப்பான முயற்சியை நேரில் பார்வையிட்டுப் பாராட்டிய பிரதியமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினரும்
பொறிமுறையை மேலும் தொழில்நுட்ப ரீதியாக மேம்படுத்துவதற்கான முக்கிய ஆலோசனைகளை வழங்கினர்.
இக்கண்டுபிடிப்பு தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் உரிய அமைச்சின் கவனத்திற்கு உடனடியாகக் கொண்டு செல்வதாகத் தெரிவித்தனர்.
இத்தாய்நாட்டு மாணவனின் முயற்சியை மேலும் பயனுள்ளதாக்கி, தேசிய ரீதியில் நடைமுறைப்படுத்தத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதாக உறுதியளித்தனர்.
சின்னஞ்சிறிய வயதில் சமூகத்திற்குப் பயனுள்ள பொறிமுறையை உருவாக்கிய மாணவன் திருச்செல்வம் ஷெர்வினுக்கு பலரும் தமது பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்