மாணவனை பா லி ய ல் துஷ்பிரயோகம் செய்த ஆசிரியை கைது !

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

வவுனியாவில் 14 வயது மாணவன் ஒருவருக்கு பாலியல் துஸ்பிரயோகம்செய்ததாக பயிலுனர் ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார்தெரிவித்தனர்.

வவுனியா தெற்கு வலயத்திற்குட்பட்ட பிரபல பாடசாலை ஒன்றில் கட்டுறுபயிலுனராக பணியாற்றிய கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த பெண் ஆசிரியர்ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

14 வயது மாணவன் ஒருவருக்கு குறித்த பயிலுனர் பெண் ஆசிரியர் பாலியல்துஸ்பிரயோகம் செய்து வந்ததாகவும், இது தொடர்பில் பாடசாலையில்முறைப்பாடு செய்தும் தீர்வு கிடைக்காத நிலையில் மாணவனின் பெற்றோரால்சிறுவர் பிரிவு மற்றும் வவுனியா பொலிஸ் என்பவற்றில் முறைப்பாடுசெய்யப்பட்டிருந்தது

முறைப்பாட்டையடுத்து குறித்த மாணவனின் வாக்குமூலம் பெறப்பட்டதுடன், மாணவன் மருத்துவ பரிசோதனைக்காக வவுனியா வைத்தியசாலையில்அனுமதிக்கப்பட்டுள்ளார். வாக்கு மூலத்தின் அடிப்படையில் பயிலுனர் ஆசிரியர்கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளின் பின் நீதிமன்றில்முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்

Share this Article