மருதனார் மடம் கொரோனா கொத்தனியுடன் தொடர்புடைய மேலும் 06 பேருக்கு கொரோனா தொற்று வைரஸ் உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
இவ் ஆறுபேரும் சந்தை வியாபாரிகளுடன் நேரடித் தொடர்புடையவர்கள் என சுகாதார வைத்திய அதிகாரி ஆர்.கேதீஸ்வரன் அவர்கள் தெரிவித்துள்ளார் இவர்கள் அனைவரும் தெல்லிப்பளையினை சேர்ந்தவர்கள் என்பதுடன் மருதனார் மடம் கொரோனா கொத்தனி மூலம் இனம் காணப்பட்டவர்களது எண்ணிக்கை 59 ஆக உயர்ந்துள்ளது.
மருதனார் மடம் கொத்தனியுடன் தொடர்புடைய 100 பேரின் மாதிரிகள் பல்கழைகழக மருத்துவ பீட ஆய்வுகூடத்தில் இடம் பெற்றது அதனது முடிவுகளே கிடைக்கப்பெற்றன.
யாழ்ப்பாணத்தில் இருந்து அனுப்பப்பட்ட 114 பேரின் மாதிரிகள் அநுராதபுரம் ஆய்வு கூடத்தில் பரிசோதனை செய்யப்பட்ட போது உடுவிலை சேர்ந்த 6 பேருக்கும், தெல்லிப்பழையை சேர்ந்த 3 பேருக்கும், நல்லூரை சேர்ந்த 2 பேருக்கும், சண்டிலிப்பாயை சேர்ந்த 2 பேருக்குமாக 13 பேருக்கு தொற்று உறுதியானது.
அத்துடன் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவப்பீட ஆய்வுக்கூட சோதனையில் தெல்லிப்பழையை சேர்ந்த 6 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.