மன்னார் – பேசாலையில் புதையல் தோண்டிய 7 பேர் கைது!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

மன்னார் , பேசாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சிறுத்தோப்பு காட்டுப்பகுதியில்புதையல் தோண்டியதாக கூறப்படும் கடற்படை அதிகாரி ஒருவர் உட்பட 7 பேர்கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த கைது நடவடிக்கை இராணுவ புலனாய்வு துறையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் நேற்று (18.05.2024) இடம்பெற்றுள்ளது  

பேசாலை பொலிஸ் பிரிவில் உள்ள சிறுத்தோப்பு காட்டுப்பகுதியில் மன்னார்மற்றும் பேசாலை பொலிஸார் இணைந்து நேற்று (18) மாலை திடீர் சோதனைநடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது, புதையல் தோண்டிய நிலையில், புதையல் தோண்டும்உபகரணங்களுடன் 7 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் திருகோணமலை கடற்படை முகாமில்கடமையாற்றும் கடற்படை அதிகாரி எனவும் ஏனையவர்கள் தென்பகுதியைச்சேர்ந்தவர்கள் எனவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அத்துடன், கைது செய்யப்பட்டவர்கள் மற்றும் அவர்கள் பயன்படுத்திய இரண்டுவாகனங்கள், ஸ்கேனர் இயந்திரம் என்பன பேசாலை பொலிஸாரிடம்ஒப்படைக்கப்பட்டுள்ளது

மேலும், கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் மேலதிக விசாரணைகளைபேசாலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Share this Article