மன்னாரில் அரச பணியாளர் மூவர் கைது!!

SUB EDITOR
SUB EDITOR
2 Min Read

தாதிய உத்தியோகத்தர் ஒருவரும் இரண்டு குடும்ப நல உத்தியோகத்தர்களும்மன்னார் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு   பொலிஸாரினால் கைது  செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.

இதன் போது  மன்னார் நீதவான் குறித்த மூவரையும் எதிர்வரும் ஓகஸ்ட் 12 வரைவிளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டநிலையில்  உயிரிழந்த மரியராஜ் சிந்துஜா என்ற பட்டதாரியான  இளம் குடும்பபெண்  மரணத்துடன் தொடர்புடையதாக பணி நீக்கம் செய்யப்பட்ட வைத்தியர்ஒருவர் உள்ளடங்களாக ஐவரில் மூவர் நேற்றையதினம் (ஓகஸ்ட் 09) கைதுசெய்யப்பட்டுள்ளதாக சட்டத்தரணி பா.டெனிஸ்வரன் தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,,,,

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டநிலையில்  கடந்த வருடம் ஜூலை 28 உயிரிழந்த மரியராஜ் சிந்துஜா என்றபட்டதாரியான  இளம் குடும்ப பெண்ணின் மரணத்திற்கு நீதி கோரி வழக்குவிசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வந்தது.

–மருத்துவக் கவனயீனத்தால் ஏற்பட்ட அதீத இரத்தப்போக்கு காரணமாக குறித்தஇளம் தாயின் மரணம் சம்பவித்துள்ளது என மருத்துவ பரிசோதனை அறிக்கைவெளி வந்தது.

இந்த நிலையில் கடமையில் இருந்த வைத்தியர் ஒருவர் உள்ளடங்களாக இரண்டுதாதிய உத்தியோகத்தர்கள் மற்றும் இரண்டு குடும்ப நல உத்தியோகத்தர்கள்உள்ளடங்களாக குறித்த ஐவரும்  பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நிலையில்விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் குறித்த ஐவரில் தாதிய உத்தியோகத்தர் ஒருவரும்,இரண்டுகுடும்ப நல உத்தியோகத்தர் களும் மன்னார் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு   பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட நிலையில் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இதன் போது  மன்னார் நீதவான் குறித்த மூவரையும் எதிர்வரும் 12ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

மேலும் சந்தேக நபரான வைத்தியர் ஒருவரையும் ,தாதிய உத்தியோகத்தர்ஒருவரையும் கைது செய்ய  உயிரிழந்த மரியராஜ் சிந்துஜா சார்பில்முன்னிலையான சட்டத்தரணி மன்றில் விண்ணப்பம் செய்தார்.

இந்த நிலையில் குறித்த வழக்கு விசாரணை மீண்டும் எதிர்வரும் 12ஆம் திகதிவிசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

Share this Article