மண்டைதீவு பிரதான வீதியின் கடற்கரை பகுதியில் கண்டல் தாவர நடுகை!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

உலக சுற்றாடல் தினத்தின் முதல் நாளான இன்றையதினம்(மே30) வேலணை பிரதேச செயலகத்தினரால் மண்டைதீவு பிரதான வீதியின் கடற்கரை  பகுதியில்கண்டல் தாவர நடுகை இடம்பெற்றது.

கடலரிப்பினை தடுக்கும் வகையில் வேலணை பிரதேச செயலகத்தினரின் ஏற்பாட்டில் இன்று காலை இடம்பெற்றது.

இந்நிகழ்வில் வேலணை பிரதேச செயலாளர், உதவி பிரதேச செயலாளர், கடற்படை கரையோர பாதுகாப்பு உத்தியோகத்தர்கள், கடற்கரை சுற்றுசூழல்பாதுகாப்பு அதிகார சபை உத்தியோகத்தர்கள், கிராம அலுவலர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமுர்த்தி அபிவிருத்திஉத்தியோகத்தர்கள், சுற்றுச்சூழல் பேரவை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Share this Article