மண்டைதீவு படுகொலையின் 35 ஆவது ஆண்டு நினைவுநாள் இன்று (ஓகஸ்ட் 26) உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.
35 வருடங்களுக்கு முன்னர் இதே தினத்தன்று இராணுவத்தால் மண்டைதீவில்நடத்தப்பட்ட படுகொலைச் சாட்சி நினைவிடத்தில் இன்றையதினம் தீவக மக்கள்ஒன்றுகூடி தமது உறவுகளை நினைவுகூர்ந்து சுடரேற்றி மலர் தூவிஅஞ்சலித்தனர்.

படுகொலை செய்யப்பட உறவுகளின் வாழும் உறவுகளில் இருவர் முதன்மைச்சுடரேற்றி நினைவிடத்துக்கு மலர்மாலை அணிவித்து ஆரம்பமான அஞ்சலிநிகழ்வில் நூற்றுக்கணக்கான மக்களும் கலந்து தமது உணர்வுகளைவெளிப்படுத்தி அஞ்சலிசெலுத்தினர்.