பெண்ணின் தங்கச் சங்கிலியை அறுத்தவா் கைது

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

வவுனியாவில் வீதியில் சென்ற பெண்ணிடம் தங்கச் சங்கிலியை அறுத்து தப்பிச்சென்ற நபர் வவுனியா குற்றத்தடுப்பு விசாரணைப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

நேற்று மாலை வவுனியா வைரவபுளியங்குளம் குளக்கட்டு அருகே சென்றுகொண்டிருந்த பெண்ணின் தங்கச் சங்கிலியை மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் அறுத்து தப்பிச் சென்றனர்.

இதைத்தொடர்ந்து வவுனியா பொலிஸ் நிலையத்தில் நேற்றைய தினம் முறைப்பாடொன்று செய்யப்பட்டிருந்தது.

இதன் அடிப்படையில் வவுனியா குற்றத்தடுப்பு விசாரணைப் பிரிவு தலைமை அதிகாரி பிரதீப் தலைமையில் நடாத்தப்பட்ட விசாரணையில், சங்கிலியை அறுத்துச் சென்ற சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன்,இவர் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் மற்றும் அறுக்கப்பட்ட ஒன்றரைப் பவுண் சங்கிலியும் மீட்கப்பட்டுள்ளது.

Share this Article