புளியங்கூடல் இந்தன் முத்துவிநாயகர் கோவில் நகைகளைக் கொள்ளை- உதவிக் குருக்கள் கைது !

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

யாழ்ப்பாணம், ஊர்காவற்றுறையில் உள்ள புளியங்கூடல் இந்தன் முத்துவிநாயகர்கோவில் நகைகளைக் கொள்ளையிட்ட குற்றச்சாட்டில் 28 வயதான உதவிக்குருக்கள் ஒருவர் யாழ்ப்பாணம் மாவட்ட விசேட குற்றத்தடுப்புப் பிரிவுப்பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆலயத்துக்குள் பாதுகாப்பாகப் பெட்டகத்தில் வைக்கப்பட்டிருந்த 62 பவுண்நகைகள் மற்றும் 8 லட்சம் ரூபா பணம் என்பன காணாமல் போயிருந்தன. இதுதொடர்பாக ஊர்காவற்றுறைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுசெய்யப்பட்டிருந்தது.

இந்தநிலையில் குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என்றுஅந்தப் பிரதேச மக்கள் கவனவீர்ப்புப் போராட்டம் ஒன்றையும்முன்னெடுத்திருந்தனர்.

இதன்படி யாழ்ப்பாணம் மாவட்டக் குற்றத் தடுப்பு பிரிவுப் பொறுப்பதிகாரி சமன்பிரேமதிலக வழிகாட்டலில் உபபொலிஸ் பரிசோதகர் பிரதீப் தலைமையிலானபொலிஸ் குழு இந்தக் கொள்ளைச் சம்பவம் தொடர்பாக விசாரணைகளைஆரம்பித்திருந்தனர்

விசாரணைகளின் அடிப்படையில் சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் 28 வயதுடைய குருக்கள்ஒருவராவார். அவர் ஆலயத் திருவிழாவின்போது உதவிக் குருக்களாகச்செயற்பட்டிருந்தார்.

சந்தேகநபரிடம் இருந்து நகைகள் மீட்கப்பட்டுள்ளன. சந்தேகநபரிடம் இருந்து40 பவுண் நகைகள் மீட்கப்பட்டுள்ளன என்றும், ஏனைய நகைகள் வங்கியில்அடகு வைக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது என்றும், அவையும்மீட்கப்படும் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

Share this Article