புங்குடுதீவில் தனியார் பஸ் உரிமையாளர் வெட்டிக்கொலை!!!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

புங்குடுதீவில் ஒருவர் வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார். புங்குடுதீவு, முதலாம் வட்டாரத்தில் நேற்று (ஓகஸ்ட் 10) இரவு 7.15 மணியளவில்இந்த சம்பவம் நடந்தது.

குறிகாட்டுவான்- யாழ்ப்பாணம் சேவையில் ஈடுபடும் தனியார் பேரூந்து உரிமையாளரான அற்புதராசா அகிலன் (வயது40)  என்பவரே இவ்வாறு கொல்லப்பட்டார்.

அவர் வீட்டிலிருந்த போது, மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர், வாள்களால்அவரை கொடூரமாக வெட்டினர். அதை தடுக்க வந்த அயல்வீட்டில் வசிக்கும் உறவினர்களும் காயமடைந்துள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக புங்குடுதீவு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதும் அகிலன் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.

அவரது உடல் புங்குடுதீவு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் இன்று (ஓகஸ்ட் 11) சட்ட விசாரணைகளின் பின்னர் மேலதக நடவடிக்கை எடுக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

காயமடைந்தவர்களின் தகவலின்படி, அதே பிரதேசத்தை சேர்ந்த ஒருவரை பொலிசார் தேடி வருகின்றதுடன் ஊர்காவற்றுறை பொலிசார் சம்பவம் தொடர்பில் விசாரணையினை மேற்கொண்டு வருகின்றனர்.

Share this Article