பல்கலைக்கழகப் பிரவேசம் – 2025/2026 கல்வியாண்டிற்கான விண்ணப்பங்கள் கோரல் !

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

2025ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், 2025/2026 கல்வியாண்டிற்கான பல்கலைக்கழகப் பிரவேசத்திற்கு விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் எதிர்வரும் 2026 மே மாதம் 19 ஆம் திகதி வரை வழங்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இது தொடர்பான பல்கலைக்கழகப் பிரவேசக் கையேட்டினை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவில் பதிவு செய்யப்பட்டுள்ள புத்தகசாலைகளின் ஊடாக மாணவர்கள் பெற்றுக்கொள்ள முடியும் என ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அதேநேரம், இம்முறை மாணவர்களின் வசதிக்காக பல்கலைக்கழகப் பிரவேசக் கையேட்டின் மென்பொருளை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.ugc.ac.lk ஊடாக ஆன்லைன் முறையில் கொள்வனவு செய்வதற்கான வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

விண்ணப்ப நடைமுறைகள் மற்றும் தகுதி விபரங்கள் உள்ளிட்ட மேலதிக தகவல்களை ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்குச் சென்று அறிந்துகொள்ள முடியும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.

Share this Article