நெடுந்தீவு மக்களுக்காகப் பணியாற்றுவோருக்கு கனடாவில் மதிப்பளிக்கும் நிகழ்வு!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

நீண்டகாலமாக நெடுந்தீவு மக்களுக்காகப் பணியாற்றிக் கொண்டிருக்கும் எவ்.சி.சத்தியஜோதி (பிரதேச செயலர், எட்வேட் அருந்தவசீலன் (சமூகப் பணியாளர், சிவஸ்ரீ கா.புவனேந்திர சர்மா (சைவ ஆகமக் குருக்கள்) ஆகியோர் கனடாவுக்கு வந்துள்ள நிலையில், அவர்களுடனான கலந்துரையாடல் ஒன்றுக்கு கனடா நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் ஏற்பாடு செய்துள்ளது.

இந்த நிகழ்வு இன்று (ஜூலை 29) சனிக்கிழமை மாலை 6 மணிக்கு ஸ்ரீ ஐயப்பன் இந்து ஆலய பழைய மண்டபத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கலந்துரையாடலில் அவர்களுக்கு மதிப்பளிக்கும் நிகழ்வும் நடைபெறவுள்ளதால் உறவுகள் அனைவரும் இந்த நிகழ்வில் இணைந்து கொள்ள வேண்டும் என்று கனடா நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது.

Share this Article