நெடுந்தீவு கொடிவேல் அறிவாலயத்தின் ஏற்பாட்டில் பரீட்சார்த்த முற்பதிவு படகுச் சேவை ஆரம்பம்!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

நெடுந்தீவு கொடிவேல் அறிவாலயத்தின் ஏற்பாட்டில் பரீட்சார்த்த முற்பதிவு படகுச் சேவை எதிர்வரும் 25 திங்கட்கிழமை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.

இப்படகு காலை 06.30 மணிக்கு நெடுந்தீவு துறைமுகத்தில் இருந்து புறப்பட்டு மாலை 05.30 மணிக்கு குறிகட்டுவான் துறைமுகத்தில் இருந்து மீளவும் நெடுந்தீவு நோக்கி புறப்படும்.

இப்படகில் 25 பயணிகள் மாத்திரமே பயணம் செய்யகூடியதாகவுள்ளதுடன் பயணம் மேற்கொள்பவர்கள் இதற்கான முற்பதிவு செய்து கொள்வது அவசியமாகும்.

பயணிக்க விரும்புவர்கள் நெடுந்தீவு இறங்கு துறைமுகத்தில் அமைந்துள்ள கதிர் பல்பொருள் வாணிபத்தில் நேரடியாகவோ அல்லது கீழ் குறிப்பிட்ட இரு தொலைபேசிக்கு தொடர்பினை ஏற்படுத்தியோ முற்பதிவு செய்து கொள்ள முடியும்.

ஒரு வழிக் கட்டணமாக நெடுந்தீவு மக்களுக்கு 350 ரூபாவும் வெளியூர் மக்களுக்கு 500 ரூபாவும் அறவிடப்படவுள்ளது.

இப்படகுச் சேவை ஒரு மாத காலத்திற்கு பரீட்சார்த்தமாக ஆரம்பிக்கப்படவுள்ளது. மக்களது ஆதரவும் தேவையும் காணப்படின் தொடர்சியாக இச் சேவை மேற்கொள்ளப்படும்.

மேலதிக தொடர்பு மற்றும் முற்பதிவு செய்வதற்கான தொலைபேசி இலக்கங்கள் – 0770251033, 0761551033

Share this Article