நெடுந்தீவு கடற்பரப்பில் இழுவைப் படகுடன் இந்திய மீனவர்கள் கைது!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நெடுந்தீவு கடற்பகுதியில் ஒன்பது இந்திய மீனவர்களுடன் இழுவை படகு ஒன்று கடற்படையினரால் நேற்று(ஜூன் 20) அதிகாலை கைப்பற்றப்பட்டுள்ளது.

நெடுந்தீவின் ஊரிமுனைக்கு அப்பால் இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையில் ஒன்பது இந்திய மீனவர்களுடன் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இழுவை படகு ஒன்று தடுத்து நிறுத்தப்பட்டது.

நெடுந்தீவு கடற்பரப்பில் இழுவைமடி மூலம் அத்துமீறிய மீன் பிடியின்போது, இயந்திரக் கோளாறு ஏற்பட்டு அதன் இயந்திரத்தில் நீர் கசிவு ஏற்பட்டமையினால் 09 இந்திய மீனவர்களும் இழுவை படகும் மீட்கப்பட்டு
நெடுந்தீவு பொலிஸாரிடம் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்பட்டள்ளதாக தெரியவருகின்றது.

Share this Article