நெடுந்தீவு ஊரும் உறவும் அமைப்பால் கணினி, ஆங்கில வகுப்புக்கள் – ஆர்வமுடையோர் இணையலாம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நெடுந்தீவு ஊரும் உறவும் அமைப்பின் 2023ஆம் ஆண்டு செயற்றிட்டத்தில் கணினி மற்றும் ஆங்கிலம் பயில ஆர்வம் உள்ளவர்களுக்கு வகுப்புக்கள் நடத்தப்படவுள்ளன.

நெடுந்தீவில் இந்த வகுப்புக்கள் நடத்தப்படவுள்ள நிலையில், ஆர்வமுடையவர்கள் இந்த வகுப்புக்களில் இணையலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வகுப்புக்களில் இணைந்துகொள்ள விரும்புவோர் நெடுந்தீவு ஊரும் உறவும் அமைப்பின் அலுவலகத்தில் எதிர்வரும் வெள்ளிக்கிழமைக்கு முன்னதாக பெயர் விவரங்களைப் பதிவு செய்ய வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக தகவல்களை 0778400534 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு அறிந்துகொள்ள முடியும்.

Share this Article