நெடுந்தீவு உதைப்பந்தாட்ட லீக் சுற்றுப்போட்டியை முன்னிட்டு கலந்துரையாடல்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நெடுந்தீவுப் பிரதேச உதைப்பந்தாட்டச் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் உதைபந்தாட்ட லீக் சுற்றுப்போட்டி எதிர்வரும் புதுவருட தினத்தன்று (ஏப்ரல் 14) மதியம் 2.00 மணிக்கு ஆரம்பமாகி 3 தினங்கள் நெடுந்தீவில் நடைபெறவுள்ளது.

இன்றைய தினம்(ஏப்ரல் 12) மாலை 4.00 மணிக்கு தெரிவு செய்யப்பட்ட உதைப்பந்தாட்ட வீரர்கள் மற்றும் அனைத்து அணிகளின் உரிமையாளர்களும் நெடுந்தீவு மகாவித்தியாலய மைதானதுக்கு வருகை தருமாறு அழைக்கப்பட்டுள்ளனர்.

நடைபெறவுள்ள போட்டிகளின் கால நேர அட்டவணை மற்றும் எதிர் கொள்ள இருக்கின்ற அணிகளின் விபரங்கள் என்பன நடைபெறவுள்ள கலந்துரையாடலில் தெரியப்படுத்தப்படவுள்ளது.

Share this Article