வைத்திய நிபுணர்கள், வைத்தியர்கள் மற்றும் ஏனைய உத்தியோகத்தர்கள் இணைந்து நேற்றையதினம் (மார்ச் 25) விசேட மருத்துவ முகாம் நெடுந்தீவுப் பிரதேச வைத்தியசாலையில் நடைபெற்றது.
யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், சுகாதார வைத்திய அதிகாரி, நெடுந்தீவு பிரதேச வைத்தியசாலை உத்தியோகத்தர்களும் பங்குபற்றினர். நான்கு மாதங்களுக்கு ஒருதடவை இந்த மருத்துவ முகாம் நடைபெறும்.
கண் சத்திர சிகிச்சை செய்யப்பட வேண்டியவர்களுக்கான ஆரம்ப பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. தெரிவு செய்யப்பட்டவர்கள் எதிர்வரும் மாதங்களில் யாழ் போதனா வைத்தியசாலையில் கண் சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்படும்.
நெடுந்தீவுப் பிரதேச வைத்திய சேவைகள் பற்றிய கலந்துரையாடல் நடைபெற்றது. வைத்தியசாலை நலன்புரி சங்க உறுப்பினர்கள் வைத்தியசாலை மேம்பாடு பற்றிய கருத்துக்களை முன்வைத்துள்ளனர்.
குறிகட்டுவானில் இருந்து யாழ் நகர் நோக்கிய பாதை விரைவாக செப்பனிட வேண்டும். ஏனெனில் நெடுந்தீவு, நயினாதீவு மற்றும் புங்குடுதீவு வைத்தியசாலைகளில் இருந்து நோயாளிகள் அனுப்பி வைக்கப்படும் போது நோயாளி காவு வண்டிகளின் பயணம் பெரும் சிரமமாக இருக்கிறது.
யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி அவர்களின் முகநூல் பதிவில் அவர் இதனைப் பதிவிட்டுள்ளார்.