நெடுந்தீவில் புதுவருட தினத்தன்று உதைப்பந்தாட்ட லீக் சுற்றுப்போட்டி!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

நெடுந்தீவு பிரதேச உதைப்பந்தாட்ட சம்மேளனத்தின் ஏற்பாட்டில் உதைப்பந்தாட்ட லீக் சுற்றுப்போட்டி எதர்வரும் புதுவருட தினத்தன்று (ஏப்ரல் 14) மதியம் 2.00 மணிக்கு ஆரம்பமாகி 3 தினங்கள் நெடுந்தீவில் நடைபெறவுள்ளது.

நெடுந்தீவிலுள்ள இளைஞர்களது ஒற்றுமையையும் உதைப்பந்தாட்டத்தையும் ஒருசேர வளர்க்கும் வகையில் வீரர்கள் ஏலமுறையில் பெற்று இப் போட்டி ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது.

இந்தப் போட்டியில் 6 அணிகள் களமிறங்கவுள்ளதுடன், நெடுந்தீவில் உள்ள விளையாட்டுக் கழகங்களில் குறைந்தது 3 கழக வீர்ர்கள் ஒரு அணியில் அங்கம்வகிக்கும் வகையில் ஏலம் பெறும்முறை பின்பற்றப்பட்டு அணிகள் தெரிவுசெய்யப்பட்டுள்ளது.

இதேவேளை உதைப்பந்தாட்டத்திற்கென வீர்ர்கள் ஏலமுறையில் பெறப்பட்டு அவ்அணிகள் போட்டியிடும் நடைமுறை இலங்கையில் முதல்முறையாக நெடுந்தீவில் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share this Article