நெடுந்தீவில் பிடிபட்ட இந்திய மீனவர்கள் 7 பேருக்கும் விளக்கமறியல் நீடிப்பு!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

நெடுந்தீவு கடற்பரப்பில் ஜூலை 13ம் திகதி கைது செய்யப்பட்ட 7 ராமேஸ்வரம்மீனவர்களையும் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 6ம் திகதி வரை மீண்டும்விளக்கமறியலில் வைக்க யாழ். ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றம் நேற்று வெள்ளிக்கிழமை (ஜூலை 25) உத்தரவு பிறப்பித்துள்ளது.

யாழ் ஊர்காவற்றுறை நீதவான் நளினி சுபாஸ்கரன் இந்த உத்தரவைபிறப்பித்துள்ளார்.

ஜூலை 13ம் திகதி இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்துக்கொண்டிருந்த போது கடல் ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கைகடற்படையினர் இந்திய இழுவைப் படகினையும் அதிலிருந்து 7 இந்தியமீனவர்களையும் கைது செய்திருந்தனர்.இலங்கை வேலைவாய்ப்பு

பின்னர் குறித்த மீனவர்களையும், இழுவை படகினையும் கடற்படையினர்காங்கேசன்துறை கடற்படையினரிடம் ஒப்படைத்தனர்.

கடற்படையினர் விசாரணைகளின் பின்னர் கடற்றொழில் திணைக்களஅதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

விசாரனைகளின் பின்னர் 7 தமிழகம் ராமேஸ்வரம் மீனவர்களையும் கடந்த13ஆம் திகதி நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தியதையடுத்து குறித்தமீனவர்களை ஜூலை 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறுநீதவான் உத்தரவு பிறப்பித்திருந்தார்.

இந்நிலையில், குறித்த மீனவர் வழக்கு ஊர்காவற்றுறை நீதிமன்றில்தேற்றையதினம் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதேவிளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் 25 படகுகளுடன்185 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share this Article