நெடுந்தீவில் கொல்லப்பட்டோரின் அந்தியேட்டிக் கிரியைகள்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

22.04.2023 அன்று நெடுந்தீவு துறைமுகப் பகுதியில் இடம்பெற்ற கொலைச் சம்பவத்தில் மரணித்த நாகனாதி பாலசிங்கம் மற்றும் அவரது மனைவியான பாலசிங்கம் கண்மணிப்பிள்ளை ஆகியோரின் அந்தியேட்டிக் கிரியைகள் இன்று(ஒக்ரோபர் 16) காலை கீரிமலை புனித தீர்த்தக்கரையில் இடம்பெற்றது.

இவ் ஆத்மசாந்திப் பிரார்த்தனையில் குடும்ப உறுப்பினர்கள் , உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரிகள் நால்வர் மற்றும் இரு ஆண் உறவுகள் என ஆறு பேர் நெடுந்தீவு பகுதியில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை உண்டாக்கியமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

Share this Article