நெடுந்தீவில் பதற்றம்!- ஐவர் வெட்டிக் கொலை!- ஒருவர் மருத்துவமனையில்!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

நெடுந்தீவு, மாவிலித்துறைக்கு அருகில் உள்ள வீடொன்றில் இருந்து ஐவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். ஒருவர் ஆபத்தான நிலையில் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்குத் தற்போது அனுப்பப்பட்டுள்ளார்.

வீட்டின் உரிமையாளர் ஒருவரும், நிகழ்வொன்றுக்குச் சென்று தங்கியிருந்த ஐவரும் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர். அவர்கள் அனைவரது உடல்களிலும் வெட்டுக்காயங்கள் காணப்படுகின்றன.

ஆறு பேரில் நால்வர் பெண்கள் என்றும், இருவர் ஆண்கள் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. இந்தச் சம்பவம் நேற்று நள்ளிரவு (ஏப்ரல் 21) நடந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகின்றது. வெளிமாவட்டத்தில் இருந்தும், வெளிநாட்டிலிருந்தும் வந்தவர்களே உயிரிழந்துள்ளனர்.

வீட்டில் இருந்தவர்களைக் காணவில்லை என்று இன்று (ஏப்ரல் 22) முற்பகல் 11 மணியவில் அயலவர்கள் தேடியபோதே வீட்டில் இருந்தவர்கள் உயிரிழந்திருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது. அதேவேளை, கொலைகள் நடந்துள்ள வீட்டுக்கு முன்பாகக் கடற்படையினரின் முகாம் ஒன்றும் உள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைக்காக யாழ்ப்பாணத்தில் இருந்து விசேட பொலிஸ் குழுக்கள் நெடுந்தீவு நோக்கி விரைகின்றன.

Share this Article