லொயலா வளாகத்தால் நடத்தப்பட்ட ஆங்கிலக் கற்கை நெறி சான்றிதழ் வழங்கும் நிகழ்வு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

இயேசுசபை துறவிகளின் பங்களிப்புடன் லொயலா வளாகத்தினால் நெடுந்தீவு கத்தோலிக்க திருஅவையின் அனுசரணையுடன் நடாத்தப்பட்ட ஆங்கில டிப்ளோமா கற்கைக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு கடந்த 1 ஆம் திகதி தெடுந்தீவு பங்குப்பணிமனையில் இடம்பெற்றது.

பங்குத்தந்தை அருட்பணி வசந்தன் அடிகளார் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் பிரதம அதிதியாக நெடுந்தீவு பிரதேசசெயலர் எப்.சி.சத்தியசோதி, அமல மரித்தியாகிகள் துறவறசபையின் மறையுரைஞர் அருட்பணி றொஜிஸ்ரன் OMI, பதில் பங்குத்தந்தை அருட்பணி ஜோண் மற்றும் கல்வித் திட்டத்தில் இணைந்திருந்த மாணவர்களும் கலந்துகொண்டனர்.

Share this Article