நெடுந்தீவுக்கான கடற்போக்குவரத்தில் ஈடுபடுத்தப்பட்டு வந்த நெடுந்தாரகைபடகு திருத்த வேலைகளின் பின்னர் இன்றையதினம் (செப். 19) நெடுந்தீவு துறைமுகத்தில் வைத்து உத்தியோகபூர்வமாக வீதி அபிவிருத்தி அதிகாரசபையிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
திருகோணமலையிலுள்ள கடற்படைத் தளத்தில் படகுக்கான திருத்த வேலைகள் முடிவுற்றுதன் பின்னர் கடற்படையினரால் வீதி அபிவிருத்தி அதிகார சபையினரிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கபடவுள்ளது.
இதற்கான நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர், பிரதம செயலாளர், மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகள் , கடற்பபடை அதிகாரிகள் படகு மூலம் நெடுந்தீவுக்கு வருகை தந்து கலந்து கொண்டதுடன் நெடுந்தீவு பிரதேச செயலர், பிரதேச சபை செயலாளர் ஆகியோரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது
ஏற்கெனவே இப் படகில் பணியாற்றிய பணியாளர்கள் தொடர்ந்து சேவையாற்றவுள்ளதுடன், வீதி அபிவிருத்தி அதிகார சபையே படகு தொடர்பான சகல விடயங்களுக்கும் பொறுப்பாகவிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
அவுஸ்திரேலியா மற்றும் உலக வங்கியின் நிதியுதவியின் கீழ் வடமாகாண சபையினால் டொக்கியாட் நிறுவனத்தின் மூலம் நெடுந்தாரகை பயணிகள் படகுசுமார் 150 மில்லியன் ரூபா செலவிடப்பட்டு தயாரிக்கப்பட்டு நெடுந்தீவு பிரதேச சபையிடம் கையளிக்கப்பட்டு சேவை இடம்பெற்றது.
கடந்த வருடம் (2023) டிசம்பர் 06 ஆம் திகதி திருத்த வேலைகளுக்காக கடற்படையினரின் உதவியுடன் நெடுந்தீவில் இருந்து திருகோணமலையிலுள்ள கடற்படைத் தளப் பகுதிக்கு கொண்டுசெல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.