நாளை சிவப்பு நிறத்தில் ஒளிரவுள்ள தாமரைக் கோபுரம் !

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read
சர்வதேச மூளையழற்சி நோய் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நாளை புதன்கிழமை (22) கொழும்பிலுள்ள தாமரை கோபுரம் சிவப்பு நிறத்தில் ஒளிரவிடப்படவுள்ளது.

இதனை தாமரை கோபுரத்தின் முகாமைத்துவ நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்த ஆபத்துமிக்க நரம்பியல் நிலை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்செபாலிடிஸ் இன்டர்நேஷனலின் அண்மைய திட்டங்களின் ஒரு பகுதியாக இவ்வாறு ஒளிரவிடப்படவுள்ளது.

கொழும்பு தாமரை கோபுரம் இவ் வருடம் சர்வதேச மூளையழற்சி தினத்தை உண்மையிலேயே குறிப்பிடத்தக்க மாற்றத்தை எற்படுத்தும் வகையில் உலகெங்கிலும் உள்ள பலருடன் இணைந்து இந்த இயக்கத்திற்கு ஆதரவளிக்கும்.

Share this Article