நாமல் ராஜபக்ஷவுக்கு ஒக்டோபர் 27 வரை விளக்கமறியல்!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

எயார்பஸ் விமானங்களைக்   கொள்முதல் செய்ததில் இலஞ்சம் பெற்ற சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை, எதிர்வரும் 27 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (13/10) உத்தரவிட்டுள்ளது.

இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகளும் சந்தேகநபரின் சட்டத்தரணிகளும் முன்வைத்த சமர்ப்பணங்களை பரிசீலித்த கொழும்பு பிரதான நீதவான் அஸங்க எஸ். போதரகம இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

அதேநேரம் எயார்பஸ் விமானங்களைக் கொள்முதல் செய்ததில் இலஞ்சம் பெற்றமை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு எதிரான வழக்கை, நிரந்தர நீதாய மேல்நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு கோரி பிரதம நீதியரசரிடம் கோரிக்கை விடுக்க இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு தீர்மானித்துள்ளதாகக் கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்றைய வழக்கு விசாரணையின் போதே, இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டார இந்தத் தகவலை நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

Share this Article
Leave a comment