இன்று நாம் நல்லிணக்கத்திற்கான தலைவர்களை தேடிக்கொண்டிருக்கும் வேளையில் அந்த தலைவர்கள் நம்முடைய குடும்பங்களிலேயே பிறப்பதையும் வளர்வதையும் உருவாகுவதையும் மறந்துவிடுகின்றோம்.
வடமாகாண தேசிய மொழிகள் சமய ஒருமைப்பாட்டு மையம் மற்றும் நெடுந்தீவு பிரதேச செயலகம் ஆகியன இணைந்து “நல்லிணக்கத்திற்கான எதிர்கால தலைவர்கள்” எனும் கருப்பொருளிற்கு அமைவாக நேற்று (ஓகஸ்ட் 24) நடாத்திய கலை நிகழ்வில் சிறப்பு அதிதியாக பிரசன்னமாகி ஆற்றிய சிறப்புரையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
மேலும் தனது உரையில், குடும்பத்தில் ஒரு நல்ல தலைவர், நல்ல தலைவி, நல்ல தலைமைத்துவமுள்ள பிள்ளைகள் உருவாகின்றபோது அந்த சமூகத்திலே நல்லிணக்கத்திற்கான தலைவர்கள் உருவாகுவார்கள். நாட்டிலே நல்லிணக்கத்திற்கான தலைவர்கள் உருவாகுவார்கள் என்பதில் எந்தவித ஐயமுமில்லை என நெடுந்தீவு திருக்குடும்ப கன்னியர் மடத்தின் முதல்வர் அருட்சகோதரி லுமினா போல்ராஜ் தெரிவித்தார்.
பிரதேசசெயலர் எப்.சி.சத்தியசோதி அவர்களின் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் வடமாகாணத்தின் தேசிய மொழிகள் சமய ஒருமைப்பாடு மையத்தின் பொறுப்பதிகாரி உயர்திரு.ந.உமாநாத் அவர்கள் பிரதம அதிதியாக சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.