நயினாதீவுக்கான கட்டடப் பொருட்களை இறக்க மாற்று துறைமுகம்!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

நயினாதீவுக்கான கட்டடப் பொருட்களை குறிகாட்டுவான் துறைமுகத்தில் இருந்து கொண்டு சென்று இறக்கும் வகையில் நயினாதீவு வங்களாவடி துறைமுகத்தினை பயன்படுத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

நயினாதீவுக்கு வருகின்ற அடியார்களுக்கும் , சுற்றுலாப் பயணிகளுக்கும்இடையூறு ஏற்படாத வகையில் கோயிற் பாலத்தினை தவிர்த்து செயற்படுத்தவும் குறித்த கட்டுமானப் பொருட்களை கொண்டு செல்ல நயினாதீவு வங்களாவடிஇறங்கு துறையை பயன்படுத்துவது தொடர்பாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.

யாழ் மாவட்ட அரசாங்க அதிபர், வேலணை பிரதேச செயலாளர், வேலணைபிரதேச சபை செயலாளர்,  பிரதேச சபையினர் மற்றும் ஏனைய துறைசார்அதிகாரிகள் கலந்து கொண்டு துறைமுகப் பகுதியினை நேற்றையதினம் (ஜூன்22) பார்வையிட்டதோடு இனி வரும் காலங்களில் இச் செயற்பாட்டுக்காக குறித்தஇறங்கு  துறையை பயன்படுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Share this Article