நயினாதீவு மகா வித்தியாலயத்தின் புதிய பாடசாலை மாணவர் சங்க நிர்வாகத் தெரிவு எதிர்வரும் 29.06.2026 ஆம் திகதி மாலை 5.00 மணிக்கு நடைபெறவுள்ளது.
வித்தியாலயத்தின் பிரதான மண்டபத்தில் நடைபெறவுள்ள இந்தத் தெரிவில், புதிய மாணவர் சங்க நிர்வாகிகளைத் தெரிவுசெய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
இதனையடுத்து, அனைத்து பழைய மாணவர்களும் குறித்த நிகழ்வில் கலந்துகொண்டு பாடசாலையின் வளர்ச்சிக்கும் எதிர்கால செயற்பாடுகளுக்கும் தங்களது பங்களிப்பை வழங்குமாறு பாடசாலைச் சமூகத்தினர் அன்புடன் அழைப்பு விடுத்துள்ளனர்.