நயினாதீவு பிரதேச வைத்தியசாலைக்கு மருத்துவ உபரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read
நயினாதீவு பிரதேச வைத்தியசாலைக்கு மருத்துவ உபரணங்கள் நயினாதீவு விகாரை விகாராதிபதியால் இன்றைய தினம் (ஜீன் – 17) வழங்கி வைக்கப்பட்டது.
நயினாதீவு பிரதேச வைத்தியசாலைக்கு நயினாதீவு விகாரை விகாராதிபதி வணக்கத்துக்குரிய நவதகல பதுமகீர்த்திதிஸ்ஸ நாயக தேரோ Nawadagala Paduma அவர்களின் ஏற்பாட்டினால் கொண்டு வரப்பட்ட மருத்துவ உபகரணங்கள் மற்றும் பொருட்கள் நோயாளர் கட்டில்கள் மற்றும் நோயாளர்களைப் பராமரிக்கும் நவீன வசதி கட்டில்கள்(Modern comfort beds) மற்றும் (wheelchair) என பல வைத்தியசாலை உபகரணங்கள் இன்று வைத்தியசாலையில் கையளிக்கப்பட்டது.
தற்பேது நடைபெற்று வரும் புனரமைப்பு வேலைகளையும் பார்வையிட்டனர்.
விகாராதிபதியின் ஏற்பாட்டில் சிங்கப்பூர் மகா கருண புத்தசாசனத்தினால் இவ் உபகரணங்கள் நயினாதீவிற்கு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் நயினாதீவின் சமூக ஆர்வலர்கள் வைத்தியசாலை ஊழியர்கள் சுகாதார விதிமுறைகளை பின்பற்றி நிகழ்வில் கலந்து கொண்டுள்ளார்கள்.
Share this Article